பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-19 19:28 GMT

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட 4-வது மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி வேலை அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தார். தேர்தல் கால வாக்குறுதிகளான 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்