ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
சங்கராபுரத்தில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.;
சங்கராபுரம்,
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், கோவிந்தன், சங்கராபுரம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். கூட்டத்தில் அடுத்த மாதம் தேனியில் நடைபெறும் மாநில செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பொன்னம்பலம், மயில்சாமி, நிர்வாகிகள் சுந்தரம், பாலசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.