ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து

ராணிப்பேட்டை ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2022-09-03 17:43 GMT

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் அன்று நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்கனவே ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் தொடர்பாக விண்ணப்பம் செய்திருந்த ஓய்வூதியர்கள் மற்றும் விண்ணப்பம் தொடர்புடைய துறை அலுவலர்கள் யாரும் கலெக்டர் அலுவலகம் வரத்தேவையில்லை.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்