ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகரில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஓய்வூதியர் இயக்குனரக இணை இயக்குனர் கமலநாதன் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 75 முன்னோடி மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், ஓய்வூதிய இயக்குனரக துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.