மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-18 18:45 GMT

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் கண்டாச்சிபுரம் வட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் கண்டாச்சிபுரத்தில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் வசந்தராயன், சங்க கொடியை ஏற்றி வைத்தார். மூத்த உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார். ஆண்டு செயல் அறிக்கையை வட்ட இணை செயலாளர் நடராஜன் வாசிக்க, வரவு செலவு அறிக்கையை வட்ட பொருளாளர் அருணாச்சலம் வாசித்தார். மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் துரைக்கண்ணு, துணைத்தலைவர் சிவனேசன், விழுப்புரம் வட்ட செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் பர்ணபாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில், மத்திய அரசுக்கு இணையான திருத்தப்பட்ட உயர்த்திய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்