ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
ஓய்வூதியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகராஜன் வரவேற்றார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.