பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி காத்திருப்பு போராட்டம்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2023-08-25 20:18 GMT

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் இன்று காலை வரை 24 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தை ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் நடத்தினர், அதன்படி காலை 10.30 மணி முதல் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது, இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமையில் தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் வரை போராடுவோம் என்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம் ஆனந்தி, டான்சாக் மனோகரன், ரமேஷ், மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் முனியசாமி, போக்குவரத்துறை சுகாதார பிரிவு மாநிலத் தலைவர் நடராஜன், அகில இந்திய பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் பார்த்தசாரதி, வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட நிர்வாகி வீரணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்