தக்கலையில் 625 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தக்கலையில் 625 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை,
தக்கலையில் 625 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று தக்கலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தக்கலை தபால் நிலையம் அருகே அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதற்கிடையே டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து ஆட்டோவுடன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் அந்த வழியாக வந்த ஸ்கூட்டரில் கடத்தி வந்த 125 கிேலா ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 625 கிலோ அரிசியும் உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.