38 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

பழனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 38 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-10-17 18:45 GMT

பழனி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் நேற்று பழனியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து திடீர் சோதனை செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு துறை மாவட்ட உதவி பொறியாளர் அனிதா, பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அடிவாரம், பஸ்நிலையம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.


குறிப்பாக பழக்கடை, இனிப்பு கடைகள், ஓட்டல் என 105 கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 25 கிலோ பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.


இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பழனி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க விழிப்புணர்வு அளித்து வருகிறோம். எனினும் சிலர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். வரும் நாட்களில் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை கடைகளில் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்