முயல் வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

கடையம்:

கடையம் வனச்சரகம் வெளிமண்டல பகுதியான சொக்கலிங்கபுரம் பகுதியில் கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சக்திவேல் (வயது 24) என்பவர் முயல் வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்