பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-26 16:08 GMT

திருவாரூரில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தமிழகத்தில் பாலித்தீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு சார்பில் மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலித்தீன் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்திடம் இருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் நகரில் நகராட்சி சார்பில் கடைகளில் இன்று  ஆய்வு நடத்தப்பட்டது. நகராட்சி மேலாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் தங்கராம், தூய்மை பாரத திட்ட அலுவலர் ஜனனி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரூ.5 ஆயிரம் அபராதம்

அப்போது பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் அரசின் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்