பொது இடங்களில் மாடுகளை திரியவிட்டால் அபராதம்
பொது இடங்களில் மாடுகளை திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவதரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே பொது இடங்களில் மாடுகளை திரிய விட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டு, பட்டிகளில் அடைக்கப்படும். பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால் மாட்டின் உரிமையாளரை பொறுப்பாக்கி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.