தேவகோட்டையில் போக்குவரத்து விதிகளை மீறிய தனியார் பஸ்களுக்கு அபராதம்
தேவகோட்டையில் போக்குவரத்து விதிகளை மீறிய தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தேவகோட்டை
தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று காலை நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்்டர் கரிகாலன், மைக்கேல் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறிய 2 தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும், நகருக்குள் அதிவேகத்தில் பஸ்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.