போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்
லாங்குபஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் லாங்குபஜார், நகரின் முக்கிய வணிக இடமாக திகழ்கிறது. இங்குள்ள கடைகள் மற்றும் மார்க்கெட்டில் பகல் நேரங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
தள்ளுவண்டி பழக்கடைகள், நடைபாதை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்தினர்.
இந்தநிலையில் லாங்குபஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதமாக விதித்த போலீசார் இடையூறாக இருந்த கடைகளையும் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.