காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்றவருக்கு அபராதம்

செங்கம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சி விற்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-10-11 16:40 GMT

செங்கம்

செங்கம் அருகே உள்ள மேல்ராவந்தவாடி காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நீப்பத்துறை பகுதியைச் சேர்ந்த தேவன் (வயது 63) மற்றும் சாமிநாதன் உள்ளிட்ட இருவரும் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை வெட்டி விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர்.

அப்போது வன அலுவலர் ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். சாமிநாதன் தம்பி ஓடி விட்டார்.

மேலும் தேவன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

அவருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய சாமிநாதனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்