சுகாதாரமற்ற முறையில் இருந்த ஓட்டலுக்கு அபராதம் விதிப்பு
சுகாதாரமற்ற முறையில் இருந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை தேர் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஓட்டலில் உணவு சமைக்கப்படும் சமையலறை கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரத்தை அபராதமாக நகராட்சி அதிகாரிகள் விதித்ததோடு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கினர்.