கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் பள்ளி, கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், ஆய்வாளர்கள் குணசேகரன், அழகுராஜ் செல்வம், கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில்பாளையம் பகுதியில் கோவில், பள்ளி அருகில் உள்ள பெட்டி கடைகள், பேக்கரிகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற மற்றும் புகை பிடிக்க அனுமதித்த 9 கடைகளுக்கு ரூ.1,800 அபராதம் விதிக்கப்பட்டது.