முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்

களக்காடு அருகே முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-04-11 21:01 GMT

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் இரவு களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில், வனக்காப்பாளர்கள் ஆரோக்கிய செல்வன், ஜெயின்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வடக்கு மீனவன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கந்தையா (வயது 50) என்பவரது வீட்டில், பூலத்தை சேர்ந்த சுப்பையா மகன் உடையார் (34), வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த சிவன் மகன் செல்லப்பாண்டி (33), சண்முகசுந்தரம் மகன் முருகன் (23), வெள்ளைபாண்டி மகன் கந்தையா (40), பேட்டை சங்கரபாண்டி மகன் விநாயகம் (28) ஆகியோர் முயல் கறி சமைத்துக் கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வடக்குமீனவன்குளம் பள்ளிக்கூடம் அருகே நாய்கள் மூலம் முயலை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்