சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையர் உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையிலான குழுவினர் ஓட்டல்களில் தேங்காய் சட்னி மோர், தயிர் மற்றும் சவர்மா ஆகியவற்றின் தரம் குறித்து கடந்த 28-ந் தேதி தொடங்கி சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
94 ஓட்டல்களில் தேங்காய் சட்னியின் தரம் குறித்து ஆய்வு செய்ததில், 6 ஓட்டல்களில் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு, ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 77 ஓட்டல்களில் மோர் தரம் குறித்தும், 80 கடைகளில் தயிர் தரம் குறித்தும், 30 கடைகளில் சவர்மா தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.