6 பஸ்களுக்கு அபராதம்
நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பஸ்களுக்கு போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு விதித்தனர்.;
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் நேற்று தனியார் பஸ்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி பயணிகள் ஏற்றி வந்தனர். அதேபோல் அரசு பஸ் டிரைவர்கள் சிலரும் நடு ரோட்டில் பஸ்சை நிறுத்தி பயணிகள் ஏற்றியுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வண்ணார்பேட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார் அரசு பஸ் உள்பட 6 பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.