சிகரெட், புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்

கோவில், பள்ளி அருகில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-03-10 12:05 GMT

ஆரணி

செய்யாறு சுகாதார துணை இயக்குனர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில் ஆரணி நகரில் கொசப்பாளையம், பெரிய ஜைனர் தெரு, களத்துமேட்டுத்தெரு, தச்சூர் ரோடு பகுதிகளில் கோவில் மற்றும் பள்ளி அருகில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 5 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.1000 வசூலிக்கப்பட்டது.

இதில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் (பொறுப்பு) மேஜர் டாக்டர் சிவஞானம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்