4 கடைகளுக்கு அபராதம்

பொன்னை பகுதியில் 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2023-06-19 16:29 GMT

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாவலர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் பொன்னை பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடைகள், குளிர்பான கடைகள், ஓட்டல்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 4 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 2 கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. எனவே அந்த 2 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற டீ துள் மற்றும் மோரை பறிமுதல் செய்து அழித்தனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்