21 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
விக்கிரவாண்டியில் 21 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் சரக போக்குவரத்து துணை ஆணையர் ரஜினிகாந்த் மேற்பார்வையில் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமையில் திண்டிவனம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜன், விழுப்புரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் முகாமிட்டு ஆம்னி பஸ், தனியார் பஸ், லாரி, வேன் ஆகியவற்றை சோதனை செய்தனர். அப்போது விதி முறைகள் பின்பற்றுவது குறித்தும், ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் உரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?, வரிகள் முறையாக கட்டப்பட்டுளதா? என ஆய்வு செய்தனர். இதில் போக்குவரத்து விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ் டிரைவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.18 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.