விதிகளை மீறிய 20 கடைகளுக்கு அபராதம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி
தேனி மாவட்டத்தில் விதிகளை மீறிய 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தேனி மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், இனிப்பு கடைகள் ஆகியவற்றில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 32 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் 20 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. விதிகளை மீறிய அந்த 20 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தொழிலாளர் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.