அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் குலசேகரம் வழியாக கேரளாவுக்கு ஏராளமான கனரக லாரிகள் எம்.சான்ட், ஜல்லி, கல் போன்றவற்றை ஏற்றிக் கொண்டு செல்கிறது. இதில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிக எடையுடன் லாரிகள் பாரம் ஏற்றி செல்வதால் ரோடுகள் பழுதடைந்து வருவதுடன் விபத்துகளும் நடைபெறுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2 கனரக லாரிகள் அதிக பாரம் ஏற்றி கொண்டு குலசேகரம் வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தன. அப்போது குலசேகரம் போலீசார் அரச மூடு சந்திப்பில் வைத்து அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் 2 லாரிகளுக்கும் ரூ.97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.