அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
புளியரையில் அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கோட்டை:
புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் தலைமையில் போலீசார் புளியரை சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அதிக அளவு பாரம் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளுக்கும் தலா ரூ.22 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.