2 நிறுவனங்களுக்கு அபராதம்:தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 2 நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் அபராதம் விதி்த்தனர்.
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில், தொழிலாளர் துறை அதிகாரிகள், தேனி மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 19 நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அதில், 2 வணிக நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.