அதிகபாரம் ஏற்றி சென்ற 12 வாகனங்களுக்கு அபராதம்
அதிகபாரம் ஏற்றி சென்ற 12 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுக்காலியூர் பைபாஸ் சாலை, குளித்தலை சாலை, அரவக்குறிச்சி -மதுரை சாலைகளில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியாக அதிக பாரம் மற்றும் கிரானைட் ஏற்றிச்சென்ற மணல் வாகனங்கள், அதிக பாரம் உடைய பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் ஆகியவற்ைற நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில், 12 வாகனங்கள் அதிகபாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, மொத்தம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.