6 மணல் லாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

விதிமுறைகளை மீறிய 6 மணல் லாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-05-10 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் காவிரி ஆற்றுப்பாலம் சோதனை சாவடி அருகே நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். இந்த வாகன சோதனையின் போது தார்பாய் போடாமல் மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் மீது சிறப்பு தனிக்கை செய்யப்பட்டு 5 லாரிகளுக்கும் தலா ரூ.1,000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அந்த வழியாக தார்பாய் போடாமலும், வாகனம் இயக்குவதற்கான அனுமதி சீட்டு இல்லாமலும் வந்த ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் சிறைபிடிக்கப்பட்டு பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவ்வழியாக விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட காரும் சிறை பிடிக்கப்பட்டது. மணல் லாரிகள் தார்பாய் போடாமல் சென்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்