வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
மொரப்பூரில் விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மொரப்பூர்:
மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், ஜெய்குமார், செல்வி மற்றும் போலீசார் மொரப்பூரில் இருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். பின்னர் அவர்களுக்கு தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் பக்க சீட்டில் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும். வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.