கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 5 பேருக்கு அபராதம்

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-11-07 17:29 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக நகராட்சி ஆணையாளர் நாராயணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் கொடைக்கானல் அண்ணா சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 5 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்