வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு திருச்செந்தூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வணிகவரி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-11-29 18:45 GMT

திருச்செந்தூர்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் தலைமையில் திருச்செந்தூர் வணிகவரி அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், 'டெஸ்ட் பர்ச்செஸ்' என்ற பெயரில் வணிகவரி துறையினர் வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்து சிறு,குறு வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பதை கண்டிக்கிறோம். இதுகுறித்து 6 மாத காலம் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுவரை இந்த டெஸ்ட் பர்ச்செஸ் முறையை தள்ளி வைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வன், மாவட்ட துணை தலைவர் யாபேஷ், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின், துணை தலைவர்கள் அழகேசன், முருகன், துணைசெயலாளர்கள் சத்யசீலன், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், லட்சுமணன் யாதவர் வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, பொருளாளர் ராமசுப்பிரமணியன், உடன்குடி வியாபாரிகள் சங்கம் தலைவர் அம்புரோஸ், செயலாளர் சதிஷ், குலசேகரன்பட்டினம் ஜெயசீலன் ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் தாமோதரன், நிர்வாகிகள் கிழக்கத்திய முத்து, ஆதிசேசன், துரைசிங், நாசரேத் வணிகர் சங்க பொருளாளர் ஜான், காயல்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்