நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2022-06-26 23:56 IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சமீபத்தில் நகராட்சி நிர்வாகம் மூலம் பஸ் நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டு அதில் டீ கடைகள், பெட்டிக்கடைகள், பேன்சி கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பஸ்நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடைக்காரர்கள் தங்களது கடைகளை வியாபார நோக்கத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதைகளில், கடைகளுக்கு முன்பாக வெளியே ஸ்டால் போட்டு அதன் மீது பொருட்களை வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பஸ்சுக்காக பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கவும், நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடமில்லாமல் நெருக்கடியான சூழல் இருந்தது.

இதைப்பார்த்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் தங்களுக்கு விடப்பட்ட இடத்தில் மட்டுமே கடை வைத்திருக்க வேண்டும். இது பயணிகள் நடந்து செல்வதற்கும், காத்திருக்கவும் உண்டான இடமென்று கூறி நாளை (அதாவது இன்று) முதல் கடைகள் எதுவும் வெளியே வரக்கக் கூடாது என்றும் தங்களுக்கு உண்டான கடைக்குள்ளேயே பொருட்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தி எச்சரித்து சென்றார். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் போலீசார் மூலம் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறி கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்