தாலுகா அலுவலகத்தில் தரையில்அமர்ந்து விவசாயி போராட்டம்

ஆத்தூர் அருகே மின் இணைப்புக்கு தடையில்லா சான்று கேட்டு தாலுகா அலுவலகத்தில் தரையில் அமர்ந்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-10-03 19:02 GMT

ஆத்தூர்

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் காமராஜர்நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவர், நேற்று தனது குடும்பத்தினருடன் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த தாசில்தார் மாணிக்கம், விவசாயி பெருமாளிடம் என்ன பிரச்சினை என கேட்டார். அப்போது, மின் இணைப்புக்காக தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆவதாகவும், உடனே வழங்க வேண்டும் எனக்கோரியும் போராட்டம் நடத்துவதாக கூறினார். அதற்கு தாசில்தார், உங்களது மனு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பிறகு பெருமாள் அங்கிருந்து கலைந்து சென்றார். இதனால் நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்