குளிர்ச்சியூட்டிய கோடை மழை; நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியை ேகாடை மழை குளிர்ச்சியூட்டியது. இந்த மழையால் நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியை ேகாடை மழை குளிர்ச்சியூட்டியது. இந்த மழையால் நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுட்டெரித்த வெயில்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி வந்தது. ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் தணிந்துள்ளது. கடைமடை பகுதியான சேதுபாவாத்திரம் பகுதியை கோடை மழை குளிர்ச்சியூட்டி உள்ளது.
நிலக்கடலை சாகுபடி
கடந்த மார்கழி, தை ஆகிய மாதங்களில் கடைமடை பகுதியில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலக்கடலை பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் போதுமான மும்முனை மின்சாரம் கிடைக்காமல் நிலக்கடலை பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.
மேலும் நிலக்கடலையை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தடுமாறி வந்தனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தற்போது மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் கடைமடை விவசாயிகள் நிலக்கடலை அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர்.