மின்சாரம் தாக்கி மயில் சாவு
அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது
அதிராம்பட்டினம்
அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மயில் ஒன்று திடீரென பறந்து சென்றபோது அப்பகுதியில் உள்ள மின்சார கம்பியில் உரசியது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அந்த மயில் இறந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், பட்டுக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மயிலை பெற்றுச் சென்றனர்.