மின்சாரம் தாக்கி மயில் சாவு
வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி மயில் செத்தது.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்நாடு, வெளிநாடு பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. உள்நாட்டு பறவையான மயில்கள் கோடியக்காட்டை தவிர்த்து கிராம பகுதிகளில் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ஒரு மயில் பறந்து சென்ற போது மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோடியக்காடு வனச்சரக அலுவலர் ஆயூப்க்கான் உத்தரவின் பேரில் வன காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சென்று மயிலை மீட்டு வேதாரண்யம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மயிலை காட்டுப்பகுதியில் புதைத்தனர்.