மின்சாரம் தாக்கி மயில் சாவு
திட்டச்சேரியில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்தது.
திட்டச்சேரி:
திட்டச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இரைக்காக அதிகளவில் மயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் திட்டச்சேரி ப.கொந்தகை பொன்னம்மாள் சமாதி பகுதியில் உள்ள விவசாய நில பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று பறந்து செல்லும்போது அங்குள்ள உயர்மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மயிலை மீட்டு நாகை வனபாதுக்காப்பு துறை அலுவலர் சிலுவைதாசிடம் ஒப்படைத்தனர். அவர் மயிலை எடுத்துச் சென்று உடற்கூறு ஆய்விற்கு பின் புதைத்தார்.