கடலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தை

கடலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினருடன் நடந்த சமாதான பேச்சுவார்த்தை சுமுக தீர்வு ஏற்பட்டதால் ஒப்பாரி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2022-08-18 16:08 GMT

கடலூர் அருகே சி.என்.பாளையம், திடீர்குப்பத்தில் 3 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். சி.என்.பாளையம், மாதா கோவில் தெரு தலித் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தும் கல்லறைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சி.என்.பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இதை அறிந்த தாசில்தார் அவர்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி கடலூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை தாசில்தார் பூபாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சமூக நலத்துறை தாசில்தார் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் ஞானமணி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில், சி.என்.பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இ-பட்டா வழங்குவது, திடீர்குப்பம் கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கு ஆக்கிர மிப்பில் வீடு கட்டியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க இயலாது. அதற்கு மாற்றாக மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது, மாதாகோவில் கல்லறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பன உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதை ஏற்ற தொழி லாளர்கள் தங்களின் ஒப்பாரி போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருப்பினும் சிலர் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்