கோவில்பட்டிதாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

கோவில்பட்டிதாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

Update: 2022-12-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆகம வசதிகள்படி அடிப்படை வசதிகள், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய மின் கம்பங்கள் அமைத்தல், கோவில் மைதானத்தில் அரசு கொடிக் கம்பங்களை அகற்றுதல், அரசியல் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தல், சேதம் அடைந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மராமத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் முன்பு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுசிலா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி நாகலட்சுமி, இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் அய்யன்பெருமாள், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்