கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள்:சேலத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

Update: 2023-08-07 20:50 GMT

சேலம்

கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். பின்னர் அவர்கள் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவு நாள்

முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம், பெரியார் மேம்பாலம் வழியாக சென்று அண்ணா பூங்காவில் உள்ள கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

60 வார்டுகளிலும்...

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைக்கண்ணன், ராஜேந்திரன், கே.டி.மணி, மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், உமாராணி, கலையமுதன், தனசேகர், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, ஏ.எஸ்.சரவணன், பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு, செந்தில், சாரதி சீனிவாசன், சிவா, கோவிந்தராஜ் உள்பட மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், சேலம் மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், கருணாநிதியின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்