சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு பஸ் வசதி வேண்டும்-போக்குவரத்து துறை அமைச்சருக்கு ப.சிதம்பரம் எம்.பி. கடிதம்
சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு பஸ் வசதி வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு ப.சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
காரைக்குடி
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்கம்புணரி பேரூராட்சியிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் வசதி கேட்டு என்னிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியிலிருந்து சென்னைக்கு நேரடியாக அரசு பஸ் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. தற்போது அவ்வசதி காரணம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே சிங்கம்புணரியிலிருந்து சென்னைக்கு நேரடியாக அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன் வழித்தடம் சிங்கம்புணரி-கொட்டாம்பட்டி- திருச்சி-சென்னை ஆகும். எனவே இந்த பகுதியில் பஸ் வசதியை அவசியம் செய்து தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.