வரிபாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும்
வரிபாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் வருகிற 15-ந் தேதி கடைசி நாள்;
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகைதொகை உள்ளிட்டவை தொடர்பான நிலுவை மற்றும் நடப்பு தொகை முழுவதையும் வரும் 15-ந் தேதிக்குள் (புதன்கிழமை) செலுத்த வேண்டும். வரி செலுத்த தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் வாசுதேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.