காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மக்கள் நல பணியாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்க கூட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.
அவர் பேசும் போது, தமிழகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணியை வரைமுறைப்படுத்தி, நிரந்தரம் செய்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும். 2006-2011-ம் ஆண்டு அரசு அறிவித்த காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
2011-ம் ஆண்டு பணி நீக்க காலத்திற்கு பிறகு இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த படி நிவாரண தொகை, ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதி யம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில்,
வருகிற 20-ந் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து மக்கள் நல பணியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பா ளர் தர்மலிங்கம், பொள்ளாச்சி தலைவர் குணசேகரன், மதுக்கரை ஒன்றிய தலைவர் சரவணன், ஆனைமலை ஒன்றிய துணைத் தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.