அடகு கடையில் 4பவுன் நகை திருட்டு
செங்கம் அருகே அடகு கடையில் 4பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
செங்கம்
செங்கம் அருகே அடகு கடையில் 4பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
செங்கம் அருகே உள்ள அரட்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை திறந்து வைத்து விட்டு அருகில் சென்று இருந்த போது மர்ம நபர் ஒருவர் கடையில் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் தங்கம், 900 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மணிகண்டன், செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.