பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் உருவ சிலை வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. நேற்று அதிகாலை 6.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்துகொண்டு ஆராதனை, திருவிழா திருப்பலியை நடத்தி வைத்தார். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.