பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை நகராட்சி தலைவர் ஆய்வு
திருச்செந்தூரில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி 24-வது வார்டு ஆலந்தலை சுனாமி நகரில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். அப்பகுதி மக்களின் கோரிக்கையடுத்து, அங்கு மழைநீர் தேங்காத அளவுக்கு சீரமைத்து, ரூ.17 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி ரமேஷ், ஆணையர் வேலவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கவுன்சிலர்கள் அந்தோணிரூமன், மகேந்திரன் உள்பட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.