பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு

Update: 2022-08-18 18:56 GMT

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாக்குவாதம்

ஒரத்தநாடு தாலுகா கிளாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் பிரவீன் ராஜா. இவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் பட்டுகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பிரவீ்ன்ராஜா மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரசவ வார்டுக்கு வந்தார். அப்போது பிரசவ வார்டு கதவு மூடி இருந்தது. பி்ன்னர் அவர்கள் கதவை தட்டினர்.

இதையடுத்து டாக்டர் மற்றும் நர்ஸ் வந்து பிரவீன்ராஜா மனைவியுடன் ஒருவர் மட்டும் உதவியாளராக செல்ல முடியும் மற்றவர்கள் வெளியேறுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

கண்ணாடி உடைப்பு

இதில் பிரவீன்ராஜா மற்றும் அவரது உறவினர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் அகிலன் இருவரும் சேர்ந்து டாக்டர்கள், நர்ஸ், காவலாளி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி மகப்பேறு ஆஸ்பத்திரி வளாகத்தின் முன்பு உள்ள கண்ணாடியை உடைத்துள்ளனர்.

இதுகுறித்து உதவி மருத்துவர் லெட்சுமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரவீன்ராஜா, அகிலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்