பட்டினமருதூர்கண்மாய் ஷட்டரை அடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பட்டினமருதூர்கண்மாய் ஷட்டரை அடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Update: 2022-12-15 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர் கண்மாய் நீர் பயன்படுத்துவோர் சங்கம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பட்டினமருதூர் கண்மாய் நீரை நம்பி 300 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த கண்மாயில் இருந்து உபரிநீர் தருவைகுளம் கண்மாய்க்கு செல்லும். இந்த நிலையில் சிலர் பட்டினமருதூர் கண்மாய் ஷட்டர்களை உடைத்து சென்று விட்டனர். இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. இதன் காரணமாக எங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் எங்கள் கண்மாயை நிரந்தரமாக அடைத்து நீர் வெளியேறாமல் தடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்