கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

சீர்காழி பகுதியில் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் வழங்கப்பட்டது.

Update: 2023-08-19 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் வழங்கப்பட்டது.

கோரிக்கை மனு

சீர்காழி பகுதியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை மற்றும் வக்ப்போர்டு, தேவாலயம், ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான அடிமனைகளில் பல தலைமுறைகளாக ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இதேபோல் காலம் காலமாக கோவில் நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றன. இவர்களுக்கு பட்டா இல்லாததால் எவ்வித அரசு சலுகைகளும் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொருளாளர் துரைராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் விஜய், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராயர், மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை வக்போர்டு, தேவாலயம், ஆதீனம் ஆகிய கட்டுப்பாட்டில் உள்ள கோவில் இடங்களில் வசிக்கும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆர்.டி.ஆர் பதிவு செய்ய வேண்டும்.

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் சிறு குறு கடை வைத்து வணிகம் செய்யும் பயனாளியிடம் குறைவான வாடகைகளை பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கேசவன், நகர செயலாளர் வக்கீல் ஞானப்பிரகாசம், மாவட்ட நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்